Wednesday, March 18, 2009

என் பாரத தோழி

வதம் செய்யலாம் வாடி
என் பாரதத்தோழி!

குண்டு வெடிக்கும் பேடி,
தைரியமிருந்தால் வா
நேரில் உன் நெஞ்சைக்காட்டி,
மோதிப்பார்ப்போம் வா
ஒண்டிக்கு ஒண்டி,
இன்னுயிர்களை
கொல்லும் சண்டி
பிற உயிர்களை நேசிக்கச்
சொன்னாரே காந்தி!

ஆதலால்
இது காந்தி பிறந்த 'கண்ட்ரி'
உன் தீவிரவாதத்திற்கு 'நோ எண்ட்ரி'

வதம் செய்யலாம் வாடி
என் பாரதத்தோழி!